ராஜபக்சேவை அழைத்து விருந்து கொடுத்தவர், மணிசங்கர் அய்யர்


தமிழக மக்களுக்கு துரோகம்: மகள் திருமணத்துக்கு, ராஜபக்சேவை அழைத்து விருந்து கொடுத்தவர், மணிசங்கர் அய்யர் மயிலாடுதுறை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எச். ஜவாஹிருல்லா, சீர்காழி வடகாலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:

இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர் படுகொலை உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. ராஜபக்சே அரசு ஈவு இரக்கமின்றி ரசாயன குண்டுகளை பயன்படுத்தி ஈழத்தமிழர் இனத்தை கொன்று குவித்து வருகிறது. தற்போது அறிவித்துள்ள இலங்கை ராணுவ போர் நிறுத்தம் நாடகமாகும்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ராஜபக்சே செய்து வருவது போர் குற்றமாகும்.

ஈராக்கில் ரசாயன குண்டுகளை பயன்படுத்தி குர்து இன மக்களை கொன்று குவித்தவர் ஈராக் அதிபர் சதாம் உசேன். இதனால் குற்றம் சாட்டப்பட்டு சதாம்உசேனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதே போல் சற்றும் குறையாத வகையில் ராஜபச்சே தமிழர் இன மக்களை கொன்றுள்ளார்.

எனவே ராஜ்பக்சேவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இலங்கை ராணுவ போர் நிறுத்தம் என்பது காலம் கடந்த ஞான உதயமாகும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றதாகும். தற்போது வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு தனது மகள் திருமணத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்து வந்து விருந்து கொடுத்தவர்தான் மணி சங்கர் அய்யர். எனவே தமிழ் மக்களுக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தை தொகுதி மக்கள் மறக்க மாட்டார்கள்.

இலங்கை பிரச்சினையில் இதுவரை மவுனம் காட்டிய அ.தி.மு.க.வையும் இத்தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா பேசினார்.

மயிலாடுதுறை வேட்பாளர்அறிமுக கூட்டம்



மனித நேய மக்கள் கட்சியின் மயிலாடுதுறை வேட்பாளர் பேரா.முனைவர் ஜவாஹிருல்லஹ் அவர்களின் அறிமுக கூட்டம் 25.04.09 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேரா. ஜவாஹிருல்லாஹ்,,ம.ம,க துணை பொது செயலாளர் அன்சாரி, சகோ. திருவள்ளுவன், T.S.S மணி, ஆகியோர் பேசினர்.கூடத்தில் பேசிய ஜவாஹிருல்லாஹ் தான் வெற்றி பெற்றால் தொகுதியிலேயே தங்கி இருந்து மக்களின் நலனுக்காக பாடுபடுவேன் என்றார்.இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

தியாகிகள் கோரிக்கை


பட்டீஸ்வரத்திலுள்ள சுதந்திர போராட்ட தியாகிகள் நலச் சங்கத்திற்கு சென்று தியாகி களிடம், அவர்களது கோரிக் கைகள் பற்றி கேட்டறிந்து, அவர்களிடம் ஆதரவு திரட்டினார். தியாகிகள் நலச் சங்கத்தின் மாவட்டதலைவர் கணேசபஞ்சாபிகேசன் மற்றும் தியாகிகள் ஜவாஹிருல்லாவிடம் 8 அம்ச கோரிக்கைகள் பற்றி எடுத் துரைத்தனர். கோரிக்கைகள் நிறைவேற தான் பாடுபடுவதாக தியாகிகளிடம் ஜவாஹிருல்லா உறுதி அளித்தார்.

பிஷப்பிடம் ஆதரவு

மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா குடந்தை மறை மாவட்ட ஆயரை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

வேட்புமனு தாக்கல்




இவரது தகுதிகள்:

BCom, M.Phil, MBA, PhD முதலான பட்டப் படிப்புகளை படித்து, 1985 முதல் பேராசிரியராக வாணியம்பாடி கலைக் கல்லூரியின் பணி ஆற்றியவர்.

1996 முதல் தமுமுக வின் வொப்பற்ற தலைவராக இருந்து அதை இன்று வரை வழி நடத்தி வருபவர்.

ஐநா சபையில் உரையாற்றியவர். மலேஷியா, சிங்கப்பூர், சவுதி, குவைத், ஃகத்தர், அமீரகம் ஆகிய நாடுகளுக்கு சென்று பல பொதுக் கூட்டங்களில் பங்கு கொண்டவர்.